1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்


28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர்.

நுற்றிற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் உட்பட 180 வரையான விடுதலைப் புலிகள் இத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழத் தாயகத்தை சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிப்பதற்காக தம்மை ஆகுதியாக்கிய இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

Posted by எல்லாளன் on 5:50 AM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for �1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்�

Post a Comment

பதிவுகள்

ஈழவிம்பகம்

பிரபாகரன் அந்தாதி

http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/THmHxicsg5I/AAAAAAAAJOs/L0WBUPzhCvQ/s1600/Pirabakaran-Anthathy.jpg



மாவீரர் தளங்கள்


ஈழவிம்பகம்






மாவீரர் தினப் பாடல்

மாவீரர் நாள் வரலாறும் பிரபாகரனும்

பரிதாபத்திற்குரிய இனமாக இருப்பதை விருப்பவில்லை -தேசியத் தலைவர்

நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள்

Eelamaravar . All Rights Reserved. -